சுடச்சுட

    

    தன்வந்திரி அவதார தினத்தை சர்வதேச ஆயுர்வேத தினமாக மத்திய அரசு வருகிற 28-ஆம் தேதி கொண்டாட உத்தரவு அறிவிப்பு வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடம் மற்றும் ஸ்ரீ தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவமனையின் ஸ்தாபகர் முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
    இதுகுறித்து அவர் கூறியதாவது:
     பக்க விளைவுகள் இல்லாத இந்த ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. பாமரர்கள் முதல் செல்வந்தர்கள் வரை ஆயுர்வேத சிகிச்சைக்கு மாறி வருகின்றனர்.
    சில நோய்களுக்கு பிற மருத்துவத்தில் இல்லாத முறை கூட ஆயுர்வேதத்தில் உள்ளதால் இம்மருத்துவ முறைக்கு மாறி வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது எனலாம்.
     தன்வந்திரி அவதார தினத்தை சர்வதேச ஆயுர்வத தினமாக மத்திய அரசு வருகிற 28-ஆம் தேதி கொண்டாட உத்தரவு அறிவிப்பு வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai