Enable Javscript for better performance
பட்டாசுக் கடை அனுமதி: 175 பேர் விண்ணப்பம்- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு பட்டாசுக் கடை நடத்தியவர்களில் 175 பேர் மீண்டும் நடத்த அனுமதி கோரி விண்ணப்பம் அளித்துள்ளனர்.
     பட்டாசுக் கடை நடத்த விரும்புவோர் வருவாய், தீயணைப்பு, காவல், சுகாதாரத் துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்று வருவாய் கோட்டாட்சியருக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்று நடத்த வேண்டும்.  வேலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 180 பேர் அனுமதி பெற்று பட்டாசுக் கடை நடத்தினர். இந்த நிலையில், வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வியாபாரம் செய்ய கடந்தாண்டு அனுமதி பெற்றவர்களில் 175 பேர் அனுமதி கோரி விண்ணப்பம் அளித்துள்ளனர்.  இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரியிடம் கேட்டதற்கு, கடந்தாண்டு பட்டாசுக் கடை நடத்தியவர்களில் இதுவரையில் 175 பேர் அனுமதி கோரி விண்ணப்பம் அளித்துள்ளனர்.
    தாற்காலிகக் கடைகளுக்கு அனுமதி கோரி இதுவரையில் விண்ணப்பம் ஏதும் வரவில்லை. வந்தால் பரிசீலித்து அனுமதி அளிக்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai