Enable Javscript for better performance
போலி மருத்துவர் தலைமறைவு: போலீஸார் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    நாட்டறம்பள்ளி அருகே பிளஸ் 2 படித்து விட்டு மருத்துவம் செய்து வந்த போலி மருத்துவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
     நாட்டறம்பள்ளியை அடுத்த கத்தாரி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமுடி. இவரது மனைவி கமலா (60). இவருக்கு கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து நாட்டறம்பள்ளியில், பிரதான சாலையில் சித்த மருத்துவமனை என்ற பெயரில் முருகன் (47) என்பவர் நடத்தி வந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அப்போது  கமலாவுக்கு முருகன் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்ததாகத் தெரிகிறது. இதன் பிறகு கமலாவுக்கு மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.   முருகன் அளித்த தவறான சிகிச்சையால் தான் கமலா பாதிக்கப்பட்டதாக கமலாவின் உறவினர் குமார் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை
    புகார் அளித்தார்.   
     இதுகுறித்து தகவலறிந்த நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் சச்சிதானந்தம், மாவட்ட மருத்துவ அலுவலர் மணிமேகலையிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து மாவட்ட மருத்துவ அலுவலர் மணிமேகலையின் உத்தரவின்பேரில், வட்டாட்சியர் சச்சிதானந்தம், காவல் ஆய்வாளர் முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவர்கள் திலீபன், செல்வகுமார் ஆகியோர் முருகன் நடத்தி வந்த மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றனர். அங்கு மேற்கொண்ட சோதனையில், முருகன் பிளஸ் 2 படித்து விட்டு போலியாக சிகிச்சை அளித்தது தெரியவந்தது. மேலும் அங்கிருந்து ஆங்கில மருந்து, மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனர்.
     இதையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள முருகனை தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai