சுடச்சுட

  

  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 91,673 மனுக்கள் அளிப்பு

  By DIN  |   Published on : 06th October 2016 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 91,673 புதிய வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதவிர சிறப்பு முகாம்கள் மூலமும் மனுக்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  இதன் பயனாக வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 91,673 பேரும், நீக்கலுக்கு 11,297, திருத்தம் செய்ய 21,904, முகவரி மாற்றத்துக்காக 7,561 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அதிகபட்சமாக குடியாத்தத்தில் 8,125 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
  தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அளிக்கப்பட்ட விண்ணப்பம் விவரம்:
  அரக்கோணம் 7,096, சோளிங்கர் 7,657, காட்பாடி 6,478, ராணிப்பேட்டை 7,988, ஆற்காடு 7,374, வேலூர் 8,345, அணைக்கட்டு 6,419, கே.வி.குப்பம் 6,148, குடியாத்தம் 8,125, வாணியம்பாடி 6,935, ஆம்பூர் 6,229, ஜோலார்பேட்டை 6,061, திருப்பத்தூர் 6,818.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai