விபத்து வழக்கில் ரூ.7.08 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
By DIN | Published on : 06th October 2016 12:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
விபத்தில் உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்துக்கு ரூ. 7.08 லட்சம் இழப்பீடு அளிக்க வேலூர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
பாகாயத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பிரான்சிஸ் (60, கடந்த 2011 அக்டோபர் 12-ஆம் தேதி நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த வேளாண்துறைக்குச் சொந்தமான டிராக்டர் மோதியதில் உயிரிழந்தார்.
இதையடுத்து உரிய இழப்பீடு கோரி அவரது மனைவி கேத்தரின் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.நடராஜன், உயிரிழந்த பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ. 7 லட்சத்து 8 ஆயிரத்து 500 இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க உத்தரவிட்டார்.