சுடச்சுட

  

  37 வருவாய் கிராமங்களை இணைத்து உள்ளூர் திட்ட எல்லை விரிவாக்கம்

  By DIN  |   Published on : 06th October 2016 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நகர, கிராமங்களின் வளர்ச்சிக்கு உள்ளூர் திட்ட எல்லை அடிப்படையாக இருப்பதால், வேலூரைச் சுற்றியுள்ள 37 வருவாய் கிராமங்களை புதிதாக இணைத்து எல்லையை விரிவாக்கும் கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
  வேலூர், காட்பாடி வட்டங்களில் உள்ள மாநகராட்சிப் பகுதி, சத்துவாச்சாரி, தொரப்பாடி, கொணவட்டம், அரியூர், தாராபடவேடு, விருதம்பட்டு, காட்பாடி, காங்கேயநல்லூர், வண்டறந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி 191.66 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளூர் திட்ட எல்லைக்கான அரசாணை 1975 மார்ச் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
  இந்தப் பகுதிகள் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருவதால் உள்ளூர் திட்ட குழுமத்தின் எல்லையை விரிவுபடுத்த 2011 பிப்ரவரி 25-ஆம் தேதி மறுசீரமைக்கப்பட்ட முழுமைத் திட்டம் (R‌e‌v‌i‌s‌e‌d​ Ma‌s‌t‌e‌r​ P‌l​a‌n) தயாரிக்க அரசாணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் வேலூர் வட்டத்தில் விடுபட்ட வெங்கடாபுரம், பெருமுகை, கீழ்மொணவூர், மேல்மொணவூர், அப்துல்லாபுரம், குப்பம் உள்பட 14 வருவாய் கிராமங்களும், காட்பாடி வட்டத்துக்குள்பட்ட கண்டியப்பேரி, சேர்க்காடு, சேவூர், அம்முண்டி, திருவலம், சேனூர், கரசமங்கலம் உள்பட 16 வருவாய் கிராமங்கள், வாலாஜா வட்டத்துக்குள்பட்ட அரப்பாக்கம், திம்மனச்சேரிகுப்பம், நந்தியாலம், மேல்விஷாரம், மேல்குப்பம், புங்கனூர் வனப்பகுதி என 37 வருவாய் கிராமங்கள் அடங்கிய 159.55 சதுர கிலோ மீட்டர் கூடுதலாக இணைத்து மொத்தம் 351.21 சதுர கிலோ மீட்டருக்கு உள்ளூர் திட்ட குழுமத்தின் எல்லையை விரிவுபடுத்தி தயாரிக்கப்பட்ட கருத்துரு மாநில அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
  இந்த கருத்துரு ஏற்கப்பட்டு விரைவில் அரசாணை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் குடியிருப்பு, விவசாயம், தொழிற்சாலைகள், நீர்நிலை, வறண்ட பகுதிகள் என வளர்ச்சியின் தேவைக்கேற்ப நிலங்கள் வகைப்படுத்தப்படும். அதன்மூலம் அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் இந்தப் பகுதிகளில் செய்து தர வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகள் பரிந்துரைப்பதைக் கொண்டு இறுதி வரைபடம் (‌R‌e‌v‌i‌s‌e‌d​ ‌T‌o‌w‌n​ ‌P‌l​a‌n‌n‌i‌n‌g​ ‌Ma‌p) தயாரிக்கப்படும்.
  இந்த வரைபடத்தின் அடிப்படையில் சாலை மேம்பாடு, சுரங்கப்பாதை, பூங்கா, பேருந்து வசதிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதோடு, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும். இதன்மூலம் மேற்கண்ட வருவாய் கிராமங்களில் நிலத்தின் மதிப்பு கணிசமாக உயர்வதோடு, வேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் திட்டமிட்ட வளர்ச்சியை எட்டும்.
  இதுகுறித்து வேலூர் உள்ளூர் திட்ட குழும அதிகாரிகளிடம் கேட்டதற்கு, கடந்த 2011-ஆம் ஆண்டு எல்லையை மறுசீரமைக்கும் திட்டம் தயாரிக்க அரசாணை வெளியிடப்பட்டது.
  அதனடிப்படையில் தயாரிக்கப்பட்டு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள கருத்துருவில் வேலூர், காட்பாடியில் விடுபட்ட வருவாய் கிராமங்களுடன், வாலாஜாவில் 7 வருவாய் கிராமங்களை இணைத்து உள்ளூர் திட்ட எல்லையை விரிவுபடுத்த கோரப்பட்டுள்ளது என்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai