Enable Javscript for better performance
அகிம்சையை வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    காட்பாடியில் உலக வன நாளை முன்னிட்டு அகிம்சையை வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
     காட்பாடி செஞ்சிலுவைச் சங்கம், போக்குவரத்து காவல் துறை, பிஎம்டி ஜெயின்பள்ளி இணைந்து நடத்திய வழிப்புணர்வுப் பேரணியை சட்டப்பேரவை உறுப்பினர் பா.கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
     காட்பாடி சில்க் மில் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஓடை பிள்ளையார் கோயில் வரையில் நடைபெற்ற பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள், போக்குவரத்து காவலர்கள் பங்கேற்றனர்.  செஞ்சிலுவைச் சங்க காட்பாடி செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆர்.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai