Enable Javscript for better performance
அக்.10 -இல் அஞ்சலக சேமிப்பு வங்கி தினம்- Dinamani

சுடச்சுட

    

    அக். 10-ஆம் தேதி அஞ்சலக சேமிப்பு வங்கி தினம் கொண்டாடப்பட உள்ளதாக திருப்பத்தூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் நா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உலக அஞ்சல் தினம் அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி உலகெங்கும் கொண்டாடப்பட உள்ளது. தேசிய அஞ்சலக வாரம் நம்முடைய நாட்டில் அக்.9-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  அந்த சமயம் அக்.10-ஆம் தேதி சேமிப்பு வங்கி தினமாகக் கொண்டாடப்பட
    உள்ளது.
     மத்திய, மாநில அரசின் நலத் திட்ட உதவிகள் அனைத்து அஞ்சலக மற்றும் வங்கிக் கணக்குகள் மூலமாகத் தான் வழங்கப்பட உள்ளது. சேமிப்புக் கணக்கு இல்லாதவர்கள் கணக்கை தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்க ரூ. 50 மட்டுமே தேவை. அஞ்சலகங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் எந்த அஞ்சலகங்களில் வேண்டுமானாலும் பணத்தை எடுக்கவோ, செலுத்தவோ முடியும். குறைந்தபட்சமாக ரூ. 500 செலுத்தினால் காசோலை வசதி அளிக்கப்படும். குடியாத்தம் மற்றும் திருப்பத்தூர் நகரங்களில் வசிப்போருக்கு ஏடிஎம் அட்டை வழங்கப்படும்.
    சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா, சுரக்ஷா பீமா யோஜனா, அட்டல் பென்ஷன் திட்டங்களை பயன்படுத்தலாம். பெண் குழந்தைகளுக்கு பிரதமரின் செல்வ மகள் சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளுக்கு பொது நல சேமிப்பு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.  
    திருப்பத்தூர் அஞ்சல் கோட்டத்தில் சேமிப்புக் கணக்கு தினத்தை முன்னிட்டு அக்.10 அன்று பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளுக்கு பொது நல சேமிப்பு திட்டம் கண்க்குகள் துவங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படும்.
    மாதாந்திர சேமிப்பு கணக்கு, மாதந்தோறும் வட்டி பெறும் கணக்கு, குறித்த கால வைப்பு கணக்கு மற்றும் மூத்த குடிமக்களுக்கு சேமிப்பு கணக்கு ஆகியவை வழங்கப்படுகின்றது.
    அஞ்சல் துறையில் அஞ்சல் சேமிப்புக் கணக்கு தொடக்கி வைத்திருந்தால் தங்களுடைய ஆதார் எண் மற்றும் கைப்பேசி எண் ஆகிய விவரங்களை தங்களுடைய சேமிப்புக் கணக்கில் இணைப்பதற்காக வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai