சுடச்சுட

    

    அணைகள், நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் பணி: ஆட்சியர் ஆய்வு

    By DIN  |   Published on : 07th October 2016 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்டத்தில் அணைகள், நீர்வரத்துக் கால்வாய் பராமரிப்பு பணியை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
    எதிர்வரும் வடகிழக்குப் பருவமழையினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    அதன் ஒருபகுதியாக, வாலாஜா வட்டத்துக்குள்பட்ட பாலாறு அணைக்கட்டு கதவணையைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், சக்கரமல்லூர், தூசி, கலவை பகுதிகளுக்குச் செல்லும் பாசனக் கால்வாய்களில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணி, பொன்னை அணைக்கட்டு கதவணை பராமரிப்புப் பணி, கடந்தாண்டு பருவமழையின் போது மேல்பாடி கிராமத்தில் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டார்.
    பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் அன்பரசு, உதவி செயற்பொறியாளர்கள் கெளரிசங்கர், விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai