சுடச்சுட

  

  குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் உலக அஞ்சல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
  நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் பிலிப் பக்தபிரசன்னா தலைமை வகித்தார். தலைமையாசிரியை ஜெனீப்பர்பிலிப் வரவேற்றார். தலைமை அஞ்சல் நிலைய உதவி கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் 200 மாணவர்களும், 100 பெற்றோர்களும் அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங்கினர்.  ஆசிரியர்கள் எம்.சுந்தரமூர்த்தி, எம்.விக்டோரியாசெல்வி, அஞ்சலக அலுவலர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  ஆம்பூரில்...
  ஆம்பூர், அக். 6: ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேசிய சேமிப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.  பள்ளித் தலைமை ஆசிரியர் செ.ரவிச்சந்திரன் வரவேற்றார். அஞ்சலகங்களின் திருப்பத்தூர் கோட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பங்கேற்று பாரத பிரதமரின் பொன்மகள் சேமிப்பு என் அஞ்சல் தலை அஞ்சல் காப்பீட்டுத் திட்டம் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.
  ஆம்பூரில் மிக அதிக மாணவிகள் சேமிப்பு கணக்கு திட்டத்தில் சேர்ந்துள்ளமைக்கு பாராட்டு தெரிவித்தார்.
  சேமிப்பின் நன்மை குறித்து மாணவி காவ்யா பேசினார். ஆம்பூர் அஞ்சல் நிலைய அலுவலர் வெங்கட்ராமன், எழுத்தர் ருக்குநாதன், நாகராஜன், அஞ்சல்காரர் சாமிநாதன், சுருக்கெழுத்தர் ஜெயந்தி, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai