சுடச்சுட

  

  குடியாத்தத்தை அடுத்த உள்ளியில் உள்ள கவுசியா பாபா ஹசரத் பீர் சையத் கவுஸ் அலிஷா காதிரி தர்கா சார்பில், உலக அமைதி வேண்டியும், இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தியும் சந்தனக் குட ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
   உள்ளி தர்காவில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், முக்கிய கிராமங்கள் வழியாக கௌசியா நகருக்குச் சென்றது.
   இதில் முஸ்லிம்களும், இந்துக்களும் பங்கேற்று தங்களது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர்.
   விழாக் கமிட்டி நிர்வாகிகள் சையத் மஹபூப் அலிஷா காதிரி, சையத் முபாரக் அலிஷா காதிரி, சையத் முராத் அலிஷா காதிரி, சையத் பஜ் அலிஷா காதிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai