Enable Javscript for better performance
டிராக்டர் மீது இரு சக்கர வாகனம் மோதல்: இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    காவேரிப்பாக்கம் காவல் நிலையம் அருகே டிராக்டர் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
     கர்நாடக மாநிலம், கே.ஜி.எப்., பாரதிபுரத்தைச் சேர்ந்த ரங்கநாதனின் மகன் மணிகண்டன்(25). இவர் சென்னையில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
    இந்நிலையில் மணிகண்டன் தனது இரு சக்கர வாகனத்தில் சென்னையில் இருந்து கே.ஜி.எப். நோக்கி வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தார். காவேரிப்பாக்கம் காவல் நிலையம் எதிரே இரு சக்கர வாகனம் வந்தபோது, முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
     இதுகுறித்து காவேரிப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai