சுடச்சுட

  

  வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழக வளர்ச்சிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டமும், புதிதாக நியமனம் பெற்றுள்ள ஆட்சிக் குழு உறுப்பினர்களுக்கு பாராட்டுக் கூட்டமும் வந்தவாசி அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் முனிரத்தினம் தலைமை வகித்தார். செயலர் கே.எம்.ஜி.ராஜேந்திரன் வரவேற்றார். பொருளாளர் செந்தில்குமார் ஆண்டறிக்கையை வாசித்தார்.
  புதிதாக நியமனம் பெற்றுள்ள ஆட்சிக் குழு உறுப்பினர்கள் வி.பாலு, மு.ரமணன் ஆகியோரை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
  பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சாதிக், அருண், கைசர் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் செயலர்கள், முதல்வர்கள் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai