சுடச்சுட

    

    வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் வைஃபை வசதி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் செயல்பட்டுவரும் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்களின் வசதிக்காக பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் வைஃபை வசதி செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகம் முழுவதும் வைஃபை வசதி செய்யப்பட்டது.
    இதன் தொடக்க விழா பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக விலங்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் பி.செந்தில்குமார் வரவேற்றார். விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் க.முருகன் பங்கேற்று வைஃபை வசதியை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
    திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் வசதிக்காக பல்கலைக்கழக வளாகம் முழுவதும் வைஃபை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி மாணவர்கள் கல்வியுடன் பொதுஅறிவையும் மேம்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்தினார்.
    பல்கலைக்கழக பதிவாளர் பி.அசோகன், பல்கலைக்கழக புல முதல்வர் பெருவழுதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai