சுடச்சுட

    

    தேசிய தட களப் போட்டிக்கு சிருஷ்டி பள்ளி மாணவர்கள் தகுதி

    By DIN  |   Published on : 07th October 2016 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் சிருஷ்டி வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்கள் தேசியப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
     சேலம் ஸ்ரீ வித்யாமந்திர் பள்ளியில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற மாநில அளவிலான தட களப் போட்டியில் மாநிலம் முழுவதிலும் 168 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
     மூத்தோர் பிரிவுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் சிருஷ்டி பள்ளி பிளஸ் 1 மாணவர் பிரேம்குமார் மாநில அளவில் முதலிடத்தையும், மும்முறை தாண்டுதல் போட்டியில் மூன்றாமிடமும் பெற்றார்.
     பிளஸ் 2 மாணவர் சூர்யா மிக மூத்தோர் பிரிவுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் மாநில அளவில் இரண்டாமிடமும், 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் பிளஸ் 2 மாணவர்கள் ராகுல், சூர்யா, பெவின், சங்கீதன் ஆகியோர் மூன்றாமிடமும் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.
     இந்தப் பள்ளி மாணவர்கள் பிரேம்குமார், சூர்யா இருவரும் தேசிய தட களப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
     போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் ராஜேந்திரன், முதல்வர் சுலோச்சனா சூசன் பிலிப், உடற்கல்வி ஆசிரியர்கள் மகேஷ், பூவரசன், ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai