சுடச்சுட

  

  ராணிப்பேட்டை, நவல்பூரில் இத்தாலிய தோல் பொருள்கள் விற்பனையகம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
  நவல்பூர் என்.பி.மோகன் டவர் வணிக வளாகத்தில் தொடங்கப்பட்ட சோஹோ எனும்  இந்த நிறுவனத்தில் இத்தாலிய தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்படும் தோல் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
  தொடக்க விழாவில் ஸ்கின் டிசைன் உரிமையாளர்கள் விமல் ஜி.நந்தகுமார், சீனிவாசன், பாலாஜி ஆகியோர் வரவேற்றனர். ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
  விழாவில் ஆற்காடு எம்எல்ஏ ஜே.எல்.ஈஸ்வரப்பன், ஓய்வு டிஎஸ்பி சீதாராமன், எம்எல்டி குரூப் என்.பி.பழனி, கே.மோகன் கல்வி அறக்கட்டளை நிர்வாகி கே.எம்.பாலு, வேலூர் ஏழுமலை ஜூவல்லர்ஸ் இ.கார்த்திகேயன், ராணிடெக் பி.ஆர்.சி.ரமேஷ்பிரசாத், ஜி.கே.பள்ளி நிர்வாக இயக்குநர் சந்தோஷ் காந்தி, கஸ்தூரி கோபால், சரளா நந்தகுமார், பிரபாவதி ரவிசங்கர், சுஜினி பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai