சுடச்சுட

    

    குடியாத்தம் அருகே பள்ளிப் பேருந்து மோதியதில் 2 வயது சிறுவன் உயிரிழந்தார்.
     குடியாத்தம், தரணம்பேட்டை, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன்.  இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் வெங்கடேசன் (55). வேலூரில் உள்ள கல்லூரியில் படிக்கும் தனது மகன் கிஷோரை, கல்லூரிப் பேருந்தில் ஏற்ற வியாழக்கிழமை காலை வெங்கடேசன் இரு சக்கர வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அவருடன் நாகராஜின் மகன் மைத்ரேயன்  இரு சக்கர வாகனத்தின் முன்பக்கம் அமர்ந்து வந்துள்ளார்.
     கிஷோரை பேருந்து ஏற்றி விட்டுச் சென்றபோது, புதிய பேருந்து நிலையம் அருகே பின்னால் வந்த தனியார் பள்ளிப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர்.
     இதில் மைத்ரேயன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த வெங்கடேசன் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai