சுடச்சுட

  

  வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையிலான மூன்று நாள் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
   மருத்துவர்கள், மாணவர்கள் மருத்துவத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் கல்லூரி வளாகத்தில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் 1,500 தலைப்புகளுக்கு மேலான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.  இதனை மருத்துவக் கல்லூரி முதல்வர் உஷா சதாசிவம் தொடங்கி வைத்தார். மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளர் ஆர்.சவுந்திர பாண்டியன், துணை முதல்வர் எம்.பாஸ்கர், குடியருப்பு அலுவலர் சி.இன்பராஜ், நூலக காப்பாளர் தர்மாம்பாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai