சுடச்சுட

  

  மனிதர்களும், விலங்கினங்களும் சேர்ந்து வாழக்கூடிய ஏற்ற இடமாக பூமி மட்டுமே உள்ளது என திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் க.முருகன் கூறினார்.
  திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் செயல்பட்டுவரும் திருவள்ளுவர் பல்கலைக்கழக விலங்கியல் துறை சார்பில் உலக விலங்குகள் தின விழா பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  விழாவுக்கு பல்கலைக்கழக பதிவாளரும் (பொறுப்பு), தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருமான பி.அசோகன் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக விலங்கியல் துறை தலைவர் பேராசிரியர் பி.செந்தில்குமார் வரவேற்றார்.
  விழாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் க.முருகன் பங்கேற்றுப் பேசியதாவது:
  விலங்கினங்களும், மனிதர்களும் ஒத்து வாழக்கூடிய ஒரே இடம் பூமி மட்டுமே ஆகும். பூமியின் மேற்பரப்பில் உள்ள நிலவெளி மற்றும் நீர்வெளியில் பல்வகை தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் மனிதர்கள் வாழ்கின்றனர். இவையாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகளை ஒத்து வாழ்கின்றன. மனிதர்தள்,விலங்கினங்கள் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜனை தாவரங்கள் உற்பத்தி செய்கின்றன. அதேபோல் விலங்கினங்களின் கழிவுகள் மூலம் தாவரங்களுக்குத் தேவையான நைட்ரஜன் உள்ளிட்ட சத்துக்கள் கொண்டு வளர்ச்சியடைகின்றன. இது சுற்றுச்சூழல் சமன்பாடு மூலம் நடைபெறும் செயலாகும் என்றார்.
   இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விழா முடிவில் பல்கலைக்கழக உயிர்தொழில் நுட்பவியல் துறை தலைவர் எர்னஸ்ட் டேவிட் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai