சுடச்சுட

    

    வேலூரில் கடும் வீழ்ச்சியடைந்து காணப்பட்ட பூக்கள் நவராத்திரி பண்டிகை, பிரம்மோற்சவ விழா காரணமாக விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
    புரட்டாசி மாதத்தில் திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா விமரிசையாகக் கொண்டாடப்படுவதால் வேலூரின் சுற்றியுள்ள பகுதிகளில் விலையும் பூக்களில் பெரும்பகுதி அங்கு கொண்டு செல்லப்படுகிறது.  இதுதவிர, இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழாவின் 10 நாள்கள் பூக்களுக்குத் தேவை அதிகளவில் இருக்கும்.
    பெரும்பாலும் இந்தக் காலகட்டத்தில் பருவமழை தொடங்கியிருக்கும் என்பதால் பூக்களின் விளைச்சல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமாகி வேலூர் சந்தைக்கு வரத்து கூடுதலாக இருக்கும் என்பதால் விலை சிறிதளவே அதிகரித்து காணப்படும்.
    நிகழாண்டில் பருவமழை பெய்யாததால் பூக்களின் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக வேலூரைச் சுற்றியுள்ள பகுதிகள், அண்டை மாவட்டமான திருவண்ணாமலை, ஒசூர், ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்து நேதாஜி பூக்கள் மொத்த சந்தைக்கு வரத்து பாதியாக குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் வரையில் வீழ்ச்சியடைந்து காணப்பட்ட பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தச் சந்தையில் வியாழக்கிழமை விற்கப்பட்ட பூக்களின் விலை (கிலோவில்): முல்லை 240, மல்லி, காக்கடா மல்லி 260, சம்பங்கி, பன்னீர் ரோஸ் 100, பட்டர் ரோஸ் 70, அரளி 120.
    இதுகுறித்து நேதாஜி பூக்கள் கமிஷன் மண்டி சங்கச் செயலாளர் எஸ்.ரமேஷ் கூறியதாவது:
    அக்டோபர் மாதத்தில் பருவமழை தொடங்கி விடும் என்பதால் பூக்களின் விளைச்சல் அமோகமாக இருக்கும். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் விலை குறைந்து காணப்படும். தற்போது மழை பொய்த்து வரத்து குறைந்துள்ளது, திருவிழாக்கள் காரணமாக பூக்கள் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் சில தினங்கள் நீடிக்கும் என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai