Enable Javscript for better performance
அக். 14, 15-இல் ஊரிசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் ஊரிசுக் கல்லூரியில் வரும் 14, 15 ஆகிய தேதிகளில் இரண்டு நாள்கள் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
    இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எஸ்.எழில் கிறிஸ்துதாஸ், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் டி.கோதண்டராமன் ஆகியோர் கூறியது:
    கல்லூரி வளாகத்தில் அக். 14ஆம் தேதி நடைபெறும் 31-ஆவது பட்டமளிப்பு விழாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 740 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
    15-ஆம் தேதி நடைபெறும் 32-ஆவது பட்டமளிப்பு விழாவில் திருவள்ளுவர் பல்கலை. பதிவாளர் பி.அசோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 938 பேருக்கு பட்டங்களை வழங்கவுள்ளார்.
    இரு பட்டமளிப்பு விழாவுக்கு சிஎஸ்ஐ பேராயர் ஏ.ராஜவேலு தலைமை வகிக்கிறார். பட்டம் பெற இதுவரையில் பதிவு செய்யாத மாணவர்கள் வருகிற 13ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்லூரி அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றனர்.
    துணை முதல்வர் எம்.ஜெய செல்வதாஸ், நிதியாளுநர் ஐ.ஸ்டான்லி ஜோன்ஸ் கருணாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai