சுடச்சுட

  

  அனைத்து விவசாயிகளையும் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 08th October 2016 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அனைத்து விவசாயிகளையும் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் அறிவுறுத்தினார்.
  விவசாயிகளுக்கு மத்திய அரசின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கூட்டுறவு வங்கிச் செயலாளர்களுக்கான பயிற்சி வகுப்பு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
  கூட்டுறவு வங்கிச் செயலாளர்கள், அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் மேலும் பேசியதாவது:
  ஏற்கெனவே விவசாயிகள் விளைவித்து வரும் பயிர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பிரதமரின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  புதிய திட்டத்தில் வருவாய் கிராம அளவில் சேதமடைந்த பயிர்களுக்கு காப்பீட்டு இழப்புத் தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதிய திட்டத்தை 5 அரசு பொதுத்துறை நிறுவனங்கள், 11 தனியார் வங்கிகள் செயல்படுத்த அங்கீகரிக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் தி நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை வழங்கவுள்ளது.
  புதிய திட்டத்தில் நடவு, விதைப்பு செய்ய இயலாத சூழ்நிலை மற்றும் விதைப்பு பொய்த்தல், விதைப்பு முதல் அறுவடை வரை இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் இழப்பு, பயிர் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு, நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  குறைந்த பாதிப்புக்குள்ளாகும் மாவட்டமாக இருந்த போதிலும் அவ்வப்போது பல்வேறு பயிர் உற்பத்தி பாதிப்புகள் ஏற்படுகின்றன.
  இழப்பீட்டுத் தொகை எவ்வித பாதிப்பின்றி சென்று சேர்ந்திடவும், அதிகளவில் விவசாயம் செய்யும் வகையில் அனைத்து விவசாயிகளை இப்புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்திட வேண்டும் என்றார் ஆட்சியர்.
  கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் திருகுண ஐயப்பதுரை, வேளாண்மை இணை இயக்குநர் ராமகிருஷணன், முன்னோடி வங்கி மேலாளர் தாமோதரன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.ஜி.விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai