Enable Javscript for better performance
ஊராட்சி செயலர் மீது தாக்குதல்: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஊராட்சிச் செயலரை தாக்கிய வழக்கில் 3 இளைஞர்களை ஆற்காடு கிராமிய போலீஸார் கைது செய்தனர்.
    சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கெளரி, சாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இந்நிலையில் சாத்தூர் ஊராட்சியில் உள்ள ஒரு பகுதிக்கு குடிநீர் சரியாக வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி வியாழக்கிழமை இரவு அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சிச் செயலாளரிடம் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
    இதில் ஆத்திரமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (19), லோகநாதன் (25), யுவராஜ் (19) ஆகிய மூன்று பேரும் கருணாகரனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அஜித்குமார் உள்ளிட்ட 3 இளைஞர்களைக் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai