Enable Javscript for better performance
ஏலகிரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மலைக்கிராம மக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    ஏலகிரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மலைக்கிராம மக்கள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 08th October 2016 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யாமல் நடவடிக்கை எடுக்கவில்லை
    யெனக் கூறி ஏலகிரி மலை காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
    வாணியம்பாடியை அடுத்த ஏலகிரிமலை நிலாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானமணி (38). இவர் சென்னையில் அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு ராஜம்மாள் (27) என்ற மனைவி யும், இரு குழந்தைகளும் உள்ளனர்.
    இந்நிலையில் மங்களம் கிராமத்தைச் சேர்ந்த சிவராஜுக்கும் (43), ராஜம்மாளுக்கும் கடந்த சில மாதங்களாக முறையற்ற பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு ராஜம்மாள் மாயமானார்.
    இது குறித்து ஏலகிரி மலை காவல் நிலையத்தில் ஞானமணி புகார் அளித்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை தாயலூர் கிராமத்தில் பதுங்கியிருந்த சிவராஜை நிலாவூர் பகுதி மக்கள் பிடித்து ஏலகிரி மலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் தாய் வீட்டுக்குச் சென்றதாக கூறி ராஜம்மாள் தனது வீட்டுக்கு திரும்பினார்.
    இந்நிலையில் மாலை 5 மணியாகியும் சிவராஜ் மீது போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை அறிந்த 100-க்கும் மேற்பட்ட நிலாவூர் கிராம மக்கள் உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல் ஆய்வாளர்கள் ரத்தினசபாபதி(ஜோலார்பேட்டை), செந்தில் (திருப்பத்தூர்) மற்றும் போலீஸார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த மறியலால் சாலையின் இரு பக்கமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai