சுடச்சுட

  

  வாலாஜாபேட்டையை அடுத்த தேவதானம் பகுதியில் சாலையோர கிணற்றில் இருந்து முதியவர் சடலம் மீட்கப்பட்டது.
  வாலாஜாபேட்டை வெங்கட்ரமண பாகவதர் தெருவைச் சேர்ந்தவர் குண்டு (எ) நாகேந்திரய்யா (75). சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவரது மனைவி பிரமிளா (65). நாகேந்திரய்யா அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவாராம்.
  வியாழக்கிழமை வீட்டை விட்டு சென்ற அவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் வாலாஜாபேட்டையை அடுத்த தேவதானம் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள கிணற்றில் வெள்ளிக்கிழமை நாகேந்திரய்யா சடலமாக மிதந்ததை அப்பகுதி பொது மக்கள் பார்த்தனர். இது குறித்த புகாரின்பேரில் வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
  அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai