சுடச்சுட

    

    கிளினிக்கில் அதிகாரிகள் சோதனை: போலி மருத்துவர் தப்பி ஓட்டம்

    By DIN  |   Published on : 08th October 2016 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாணியம்பாடி அருகே கிளினிக் ஒன்றில் மருத்துவ அதிகாரிகள் சோதனை செய்தபோது அங்கிருந்த போலி மருத்துவர் பின்பக்கம் வழியாக தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோயில் பகுதியில் ராஜா மருத்துவமனை என்ற பெயரில் இயங்கும் கிளினிக்கில் தமிழரசன் என்பவர் முறையாக மருத்துவம் படிக்காமல் பல ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக வேலூர் மருத்துவ இணை இயக்குனர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    இதையடுத்து மருத்துவ இணை இயக்குனர் மணிமேகலை உத்தரவின்பேரில், வாணியம்பாடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் உஷா தலைமையிலான மருத்துவக் குழுவினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் அங்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து பின்புறக் கதவைத் திறந்து தமிழரசன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாராம். அவரை மருத்துவக் குழுவினர் விரட்டி பிடிப்பதற்குள் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.
    அதன்பிறகு அங்கிருந்த ஆங்கில மருந்துகள், ஊசிகளை கைப்பற்றினர். மேலும் பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு அவர் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்து மருத்துவ அலுவலர் உஷா அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து போலி மருத்துவரை தேடி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai