சுடச்சுட

  

  கோவை வன்முறை சம்பவத்தில் தொடர்பில்லாதவர்கள் சிறையில் அடைப்பு:வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 08th October 2016 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவை வன்முறை சம்பவத்தில் தொடர்பில்லாதவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
  கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை பாஜக மாநில பொதுச் செயலாளர்கள் வானதி சீனிவாசன், நரேந்திரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் இருவரும் கூறியதாவது:
  கோவையில் நிகழ்ந்த
  வன்முறை சம்பவத்தில் தொடர்பில்லாதவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களில் பலர் எந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யவேண்டும். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல்காந்தி சந்திக்க வந்தது மரியாதை நிமித்தமானதுதான். தேவைப்பட்டால் முதல்வர் ஜெயலலிதாவை, பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க வாய்ப்புள்ளது என்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai