சுடச்சுட

    

    நகை அடகுக் கடைக்காரர்கள் உரிமத்தைப் புதுப்பிக்க எஸ்.பி. அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 08th October 2016 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவடடத்தில் தங்க நகை, அடகுக் கடைக்காரர்கள் உரிமக் காலம் முடிவதற்குள் புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் தங்க நகை, அடகுக் கடை உரிமையாளர்கள் உரிய உரிமங்களை வைத்திருக்க வேண்டும். உரிமக் காலம் முடிவதற்குள் விண்ணப்பித்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும். விலை உயர்ந்த பொருள்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும்.
    சமீப காலமாக அடகுக் கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடந்தபோது பக்கத்தில் உள்ள கடைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்து அடகுக் கடைகளின் சுவற்றை குடைந்து உள்ளே சென்று நகைகள் திருடப்பட்டுள்ளன. எனவே, குற்றங்களை தடுக்கும் வகையில் கட்டடத்தின் சுவர், மேற்கூரைகள் கான்கிரீட்டாக அமைப்பதுடன், அதிநவீன சிசிடிவி கேமரா, அலாரங்களைப் பொருத்த வேண்டும். நகைகள் வைக்கப்படும் பாதுகாப்பு பெட்டகங்கள் அதிநவீனமானதாக இருக்க வேண்டும்.
    கடைகளுக்கு வெளியே மின்விளக்கு வசதி, இரவுக் காவலாளிகளை அடகுக் கடை உரிமையாளர்கள் நியமிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai