சுடச்சுட

  

  ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் சபரி நகரில் அமைந்துள்ள நவசபரி ஐயப்பன் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி கோயில் வளாகத்தில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு நாள்தோறும் முப்பெரும் தேவியருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
  அழகிய வேலைப்பாடுகளுடன் வண்ண கொலு பொம்மைகளின் அணிவகுப்பு, அலங்காரமாய் வீற்றிருக்கும் தெய்வங்களின் உருவங்கள், மகான்கள், தேசத் தலைவர்கள், புராண இதிகாச நாயகர்கள் பொம்மைகள் கொலுவில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயில் குருசாமி வ.ஜெயச்சந்திரன் செய்து வருகிறார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai