சுடச்சுட

  

  நெமிலி ஸ்ரீபாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழாவை முன்னிட்டு கலச ஸ்தாபன நிகழ்ச்சி  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் உள்ள ஸ்ரீபாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா வெகு விமரிசையாக கடந்த 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
  இதன் முக்கிய நிகழ்ச்சியான கலச ஸ்தாபனம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை பீடாதிபதி எழில்மணி கலசத்தை ஸ்தாபனம் செய்து தொடங்கி வைத்தார்.
  தேங்காய் வைத்து செய்யப்படும் இந்தக் கலசம் இப்பீடத்தில் ஒரு வருடத்துக்கு பூஜைகளுடன் பாதுகாப்பாக வைக்கப்படும். அடுத்த நவராத்திரியின்போது எடுத்து மாற்றி இந்த தேங்காய் உடைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படும்.
  நெமிலி ஜி.பாபாவின் ஆன்மிக குடும்பங்கள் இணைந்து நடத்தும் அன்னை பாலா ஆச்சரியம் ஆயிரம், அன்னை பாலா ஆனந்தம் ஆயிரம் எனும் இரு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலசத்தை தரிசிக்க வந்த பக்தர்களுடன் இணைந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  விழாவுக்கான ஏற்பாடுகளை பாலா பீட நிர்வாகி மோகனகிருஷ்ணன், நெமிலி இறைப்பணி மன்றச் செயலர் கே.முரளீதரன், துணைத் தலைவர் என்.வேணுகோபால் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai