Enable Javscript for better performance
பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொழில் நுட்பப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம், சென்னை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான பட உள்கிரகிப்பு தொழில்நுட்ப செயலி பணிமனை வாலாஜாபேட்டையில் செவ்வாய்க்
    கிழமை நடைபெற்றது.
    முகாமுக்கு ராணிப்பேட்டை ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வர் பஷீர் அகமது தலைமை வகித்தார். முகாமை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். முகாமில் மாணவர்களுடைய நினைவாற்றலை அதிகப்படுத்தும் வகையிலும், கூடுதல் தகவல்களை புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக கற்றுத்தருதல் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
    இதில் 30-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai