சுடச்சுட

    

    ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்தார்.
    ஆம்பூரை அடுத்த மிட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (45). இவர் வெள்ளிக்கிழமை ஆம்பூர்-பச்சகுப்பம் ரயில் நிலையங்களுக்கிடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் சாமிநாதன் நிகழ்விடத்திலேயே இறந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சாமிநாதனுக்கு மனைவி குமுதாவும், ஜோதி என்ற மகளும் உள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai