Enable Javscript for better performance
100 மாணவர்கள் ரத்த தானம்- Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தத்தை அடுத்த காக்காதோப்பில் உள்ள குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரியில், ரோட்டரி சங்கம், வேலூர் நாராயணி மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் 100 மாணவர்கள் ரத்த தானம் அளித்தனர்.
    முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.ஜே.ஏ. கார்த்திகேயன் தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் வி. புருஷோத்தமன் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் கே.ஜவரிலால் ஜெயின் முகாமைத் தொடங்கி வைத்தார்.
    கல்லூரி முதல்வர் கே.குமரவேல், ரோட்டரி நிர்வாகிகள் என்.சத்தியமூர்த்தி, வி.பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai