சுடச்சுட

  

  பள்ளி மாணவர்களுக்கான கடிதம் எழுதும் போட்டி வேலூர் எவர்கிரீன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகிற அக்.23-ஆம் தேதி நடைபெறுகிறது.
  இதுகுறித்து அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
  உலக அஞ்சல் குழுமத்தின் சார்பில் 46-வது ஆண்டு கடிதம் எழுதும் போட்டி நாடு முழுவதிலும் வருகிற அக்.23-ஆம் தேதி நடைபெறுகிறது. அஞ்சல் துறையின் சென்னை மண்டலம் சார்பில் நடைபெறும் இப்போட்டியானது, வேலூரில் காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். இதில் 15 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
  வேற்றுமையில் ஒற்றுமை இந்தியரின் வலிமை என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் அல்லது இந்தி மொழிகளில் கடிதம் எழுதலாம். தேசிய அளவில் சிறந்ததாகத் தேர்வு செய்யப்படும் முதல் மூன்று மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களுடன் தலா ரூ. 5,000, ரூ. 3,000, ரூ. 2,000 வழங்கப்படும். மாநிலத்துக்கு ஒரு ஆறுதல் பரிசாக ரூ. 1,000 அளிக்கப்படும்.
  போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்து, பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai