சுடச்சுட

    

    கடத்தப்பட்டதாக நாடகம்: பள்ளி மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

    By DIN  |   Published on : 09th October 2016 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூரில், கடத்தப்பட்டதாக நாடகமாடிய தனியார் பள்ளி மாணவர்கள் இருவருக்கு போலீஸார் அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.
    வேலூர், சத்துவாச்சாரியைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர்கள் இருவரின் மகன்கள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் இருவரும் மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிய பெற்றோர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    இந்த நிலையில், சனிக்கிழமை காலை பெற்றோரின் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய மாணவர்கள், தங்களை சிலர் ஆட்டோவில் கடத்திச் சென்றதாகவும், அவர்களிடமிருந்து தப்பி ஆற்காடு மணிக்கூண்டு அருகே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற மாணவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது மயக்க ஸ்பிரே அடித்து 3 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் கடத்திச் சென்றதாகவும், அவர்களிடமிருந்து தப்பி வந்ததாகவும் கூறியுள்ளனர்.
    தொடர்ந்து இருவரிடம் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில், மாணவர்கள் இருவரும் கடத்தல் நாடகம் ஆடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் போலீஸார் அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai