சுடச்சுட

    

    அரக்கோணம் புத்தா பாபாசாகேப் அம்பேத்கர் அறநிலைய அறக்கட்டளையின் சார்பில், கல்வி முன்னேற்ற மற்றும் ஊக்க கருத்தரங்கம் அரக்கோணத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
    அரக்கோணம் அரசு ஆதிதிராவிடர் நலத் துறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் அசோகன் வரவேற்றார். காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில், தொடர்ந்து அதிக மதிப்பெண்களை பெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இக் கருத்தரங்கில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதிக மதிப்பெண் பட்டியலில் தங்கள் பெறச் செய்ய முயலும் மாணவர்கள் என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், இந்த மாணவர்களை ஊக்குவிப்பது குறித்தும் இக்கருத்தரங்கில் ஆலோசிக்கப்பட்டது.
    நிகழ்ச்சியில் பள்ளித் தேர்வுகளான காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பண முடிப்பும், திருக்குறள் நூலையும் புத்தாசாகேப் அம்பேத்கர் அறநிலைய அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் நைனாமாசிலாமணி வழங்கினார்.
    கருத்தரங்கில் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் ப.யஸ்வந்த ராவ், ஜான்அன்பழகன், துரை.மோகன்குமார், எஸ்.சி., எஸ்.டி. கூட்டமைப்பின் தலைவர் அ.கலைநேசன், பொதுச்செயலர் க.கெளதம், செயலர் ச.சி.சந்தர், ஆர்.சத்தியநாராயணன், அரக்கோணம் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.ரகுநாதன், அன்னை தெரேசா கிராம முன்னேற்ற சங்க நிறுவனர் ஐ.டி.தேவ ஆசீர்வாதம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    நிகழ்ச்சியில் பள்ளிக்கு நான்கு மின் விசிறிகளையும் அறக்கட்டளை அறங்காவலர்கள் வழங்கினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai