சுடச்சுட

    

    திருப்பத்தூர் அருகே கொலை செய்யப்பட்டுக் கிடந்த அடையாளம் தெரியாத ஆணின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
    வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த கந்திலி அருகே கரியம்பட்டி கிராமத்தில் மாம்பழச் சாறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதன் அருகே முள்புதரில் 45 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடப்பதை அப்பகுதி மக்கள் சனிக்கிழமை பார்த்துள்ளனர்.
    இதுகுறித்து அவர்கள் கந்திலி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கந்திலி காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் சடலமாக கிடந்தவரின் தலை, கை, கால் பகுதியில் ரத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. மர்மநபர்கள் அவரை அடித்துக் கொலை செய்து முள்புதரில் வீசிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
    இதையடுத்து சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்த கந்திலி போலீஸார், கொலை செய்யப்பட்டவர் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai