Enable Javscript for better performance
கோயில்களில் புரட்டாசி நான்காவது சனிக்கிழமை உற்சவம்- Dinamani

சுடச்சுட

    

    வாணியம்பாடியை அடுத்த திம்மாம்பேட்டையில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில், புரட்டாசி 4-ஆம் சனிக்கிழமை உற்சவம் நடைபெற்றது.
    இதையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதியுலா நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்ன தானம் நடைபெற்றது.


    பெரிய ஆஞ்சநேயர்கோயிலில் புரட்டாசி விழா

    ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம் நடைபெற்றது.
    நிகழ்ச்சியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவர் பிரகார உலா நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai