சுடச்சுட

  

  "தாய்மொழியில் அடிப்படை கல்வி கற்க வேண்டியது அவசியமாகும்

  By DIN  |   Published on : 09th October 2016 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தாய்மொழியில் அடிப்படை கல்வி கற்க வேண்டியது அவசியமாகும் எனஅமெரிக்க பல்கலைக்கழகப் பேராசிரியர் காஜி எஸ்.அஜெர் தெரிவித்தார்.
  பல்கலைக் கழக மானியக்குழு உதவியுடன் கற்றல் மற்றும் கற்பித்தல் அறிவியல் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு மஜ்ஹருல் உலூம் கல்லூரி செயலரும், தாளாளருமான எம்.நஜர் முஹம்மத் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற அமெரிக்காவின் மிக்ஸிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் காஜி எஸ். அஜெர் பேசியதாவது:
  தாயின் மொழியை குழந்தை அறியும். அதனால் தான் தாய்மொழியில் அடிப்படை கல்வியை கற்க வேண்டுமென கூறப்படுகிறது. பல்வேறு நாடுகளில் அவர்களுடைய நாட்டு தாய் மொழியில் தான் அடிப்படை கல்வி கற்பிக்கப்படுகிறது. அதனால் தாய் மொழியில் அடிப்படை கல்வி கற்க வேண்டியது அவசியமாகும்.
  வகுப்பறைகள் அனைத்தும் ஆராய்ச்சி கூடங்களாகும். அதனால் ஆசிரியர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு புரியும் வகையில் கற்பித்தால் தான் அவர்கள் எளிதாக கற்பார்கள். அவர்களுக்கு புரியும் வகையில் கற்பிக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகும். தற்போதைய கால சூழ்நிலையில் கற்றல் மற்றும் கற்பித்தலில் அறிவியல் உள்ளது. 8 வயது வரை தொலைகாட்சியை பார்க்க பிள்ளைகளை அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் தொலைகாட்சியை பார்க்கும் போது கருத்து பறிமாற்றம் இருக்காது. அதனால் பிள்ளைகள் தங்கள் அறிவை வளர்க்க முடியாது என்றார்.
  சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி நிலையங்களின் சங்க பொதுச் செயலாளருமான எஸ்.சாதிக், கல்லூரி முதல்வர் பி.எம். ஆதில்அஹமத், வணிகவியல் துறைத் தலைவர் என்.ராஜா உசேன், கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் ஷபீ அஹமத் கான், பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai