Enable Javscript for better performance
தொழிலாளி கொலை: உறவினர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வாலாஜாபேட்டையில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது உறவினரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
    வாலாஜாபேட்டை, அம்பேத்கர் நகர், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாபு (40). கயிறு திரிக்கும் தொழிலாளியான இவர், கடந்த மாதம் 19-ஆம் தேதி வீட்டின் முன்பு இருந்துள்ளார். அப்போது உறவினர் ஜெயசீலனுடன் (49) சொத்து குறித்து தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
    இதையடுத்து பாபுவை ஜெயசீலன் ஐல்லிக் கற்களால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த பாபு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பாபு அண்மையில் உயிரிழந்தார்.
    இதுகுறித்து வாலாஜாபேட்டை காவல் ஆய்வாளர் விஜிகுமார், உதவி ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோர் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த ஜெயசீலனை (49) தேடி வந்தனர். இந்நிலையில்
    ஜெயசீலனை சனிக்கிழமை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai