சுடச்சுட

    

    போலி பத்திரம் தயாரித்து நிலம் அபகரிப்பு: மூவர் மீது வழக்குப் பதிவு

    By DIN  |   Published on : 09th October 2016 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காட்பாடியில் பூட்டியிருந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு, போலி பத்திரம் தயாரித்து நிலத்தை அபகரித்ததாக தந்தை, மகன் உள்பட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    மதுரை மாவட்டம், பொன்மேனி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரி (84). இவரது பெற்றோர் கடந்த 1967-ஆம் ஆண்டு காட்பாடி காந்தி நகரில் 4,500 சதுர அடி நிலம் வாங்கி, வீடு கட்டியுள்ளனர்.
    இந்த நிலையில் சுந்தரியின் பெற்றோர் இறந்ததைத் தொடர்ந்து அங்கு சுந்தரியின் சகோதரர் ராமசாமி வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2005-ஆம் ஆண்டு இறந்தார். இதையடுத்து வீடு பூட்டி வைக்கப்பட்டது.
    இந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன்பு காட்பாடியில் உள்ள வீட்டைப் பார்க்க வந்தபோது, இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக பத்திரப் பதிவுத் துறையில் விண்ணப்பித்து வில்லங்கச் சான்றிதழை வாங்கிப் பார்த்தபோது, காட்பாடியைச் சேர்ந்த சம்பத் என்பவர் போலி பத்திரம் தயாரித்து துரைசாமி என்பவருக்கு விற்றதும், அந்த நிலத்தை வாங்கிய துரைசாமி தனது தந்தை குப்புசாமி பெயருக்கு மாற்றியதும் தெரியவந்தது. நிலத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்குமெனக் கூறப்படுகிறது.
    இதுகுறித்து மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸில் சுந்தரி புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து சம்பத், துரைசாமி, குப்புசாமி ஆகிய மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai