சுடச்சுட

    

    வேலூர், ராணிப்பேட்டையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) சுமார் ரூ. 2.58 கோடிக்கு சமரசத் தீர்வு காணப்பட்டது.
    சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வேலூர், 10 வட்ட நீதிமன்றங்களில் லோக் அதாலத் சனிக்கிழமை நடைபெற்றது. சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற லோக் அதாலத்துக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான வி.தாமோதரன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.லட்சுமி, வழக்குரைஞர் எஸ்.பாஸ்கரன், சமூக ஆர்வலர் மில்கா மேரி கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    நகராட்சிகளில் தீர்வு காணப்படாதவை, போக்குவரத்து உள்பட 811 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 517 வழக்குகளில் ஒரு கோடியே 77 லட்சத்து 75 ஆயிரத்து 475 ரூபாய்க்கு சமரசத் தீர்வு காணப்பட்டது.
    ராணிப்பேட்டையில்...
    ராணிப்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற லோக் அதாலத்துக்கு, சட்டப் பணிகள் ஆணைக்குழு மாவட்ட கூடுதல் நீதிபதி வினோபா தலைமை வகித்தார்.
    சார்பு நீதிபதி தஸ்நீம், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சாண்டில்யன், ஓய்வுபெற்ற சார்பு நீதிபதி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    இதில் மோட்டார் வாகன விபத்து, சிவில் வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் என மொத்தம் 149 வழக்குகள் மீது சமரசத் தீர்வு காணப்பட்டு ரூ. 81,67,800-க்கு சமரசத் தீர்வு காணப்பட்டது.
    மேற்கண்ட வழக்குகளில் ராணிப்பேட்டை வழக்குரைஞர் சங்கத் தலைவர் எம்.சங்கர், செயலாளர் ராஜேந்திரன், எஸ்.குமரகுரு உள்ளிட்டோர்
    ஆஜராயினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai