Enable Javscript for better performance
மது பானங்கள் பதுக்கி வைத்து விற்பனை: 13 பேர் கைது- 343 மது பாட்டில்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    மது பானங்கள் பதுக்கி வைத்து விற்பனை: 13 பேர் கைது- 343 மது பாட்டில்கள் பறிமுதல்

    By DIN  |   Published on : 09th October 2016 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசி பகுதியில் மது பானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மொத்தம் 343 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    வந்தவாசி பகுதியில் காலை நேரங்களில் அரசு மதுபானக் கடைகளின் அருகில் மது பானங்களை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வந்தவாசி தெற்கு, வடக்கு, கீழ்க்கொடுங்காலூர், வடவணக்கம்பாடி போலீஸார் வெள்ளிக்கிழமை காலை அந்தந்த காவல் நிலையங்களுக்கு உள்பட்ட அரசு மதுபானக் கடைகளின் அருகில் சோதனை மேற்கொண்டனர்.
    அப்போது, மதுபானங்களை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்ததாக வந்தவாசி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வாசு (24), எள்ளுப்பாறையைச் சேர்ந்த குமார் (40), கோட்டை காலனியைச் சேர்ந்த வெங்கடேசன் (40), வேலு (43), பெரிய காலனியைச் சேர்ந்த முத்து (60), அம்மையப்பட்டைச் சேர்ந்த சோழன் (33), தேத்துறையைச் சேர்ந்த இளங்கோ (36), பழஞ்சூரை சேர்ந்த பாண்டுரங்கன் (67), கீழ்க்கொடுங்காலூரைச் சேர்ந்த சேகர் (45), வெளியம்பாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தன் (68), கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி (62), மழையூர் அருந்ததியர்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (50), வடவணக்கம்பாடியைச் சேர்ந்த ஜமாலுதீன் (47) ஆகிய 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அவர்களிடமிருந்து மொத்தம் 343 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai