சுடச்சுட

    

    வாணியம்பாடி அருகே இரு சக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
    வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் கேசவன் தலைமையில், போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு மாதகடப்பாமலை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்த முயன்றனர். ஆனால் போலீஸாரைக் கண்டதும் இரு சக்கர வாகனத்தை நிறுத்தாமல் அதில் வந்தவர் வேகமாக ஓட்டிச் சென்றார். இதையடுத்து போலீஸார் அவரை பின் தொடர்ந்து சென்று சிறிது தொலைவில் மடக்கிப் பிடித்தனர்.
    அப்போது இரு சக்கர வாகனத்தில் 3 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது.
    விசாரணையில் அவர் வெலதிகாமணிபெண்டா பகுதியைச் சேர்ந்த பாலன் (29) என்பது தெரியவந்தது. மேலும் ஆந்திர பகுதிக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
    இதையடுத்து பாலனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிந்தனர்.
    இது தொடர்பாக வேலூர் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் பாலனையும், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள், இருசக்கர வாகனத்தையும் ஒப்படைத்தனர். இதையடுத்து பாலனை போலீஸார் கைது செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai