சுடச்சுட

    

    வாலாஜா வட்டத்தில் கூடுதல் இ சேவை மையம் அமைக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 09th October 2016 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொதுமக்களுக்கு தேவையான இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட அரசு வழங்கும் அத்தியாவசிய சான்றிதழ்கள் விரைந்து கிடைக்க வாலாஜாபேட்டை வட்டத்தில் கூடுதல் இ-சேவை மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தமிழக அரசு, பொதுமக்களின் கால விரயத்தையும், வீண் செலவுகளையும் தவிர்க்கும் நோக்கில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் இ}சேவை மையம் கடந்த ஆண்டு தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது.
    இந்த மையங்களின் மூலம், வருமானச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ் போன்ற வருவாய்த் துறையின் சான்றிதழ்களை வழங்கும் சேவைகளும், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார்
    நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம் போன்ற சமூக நலத் துறை திட்டங்கள் சார்ந்த சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
    மேலும் மாணவ, மாணவிகள் மற்றும் அரசின் உதவித் திட்டங்களை பெறும் பயனாளிகள் இணையதளம் மூலம் சான்றிதழ் பெறவும், விண்ணப்பிக்கவும், பிளாஸ்டிக் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது, அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு விண்ணப்பிப்பது, மின் கட்டணம் செலுத்துவது போன்ற கூடுதல் சேவைகளும் அளிக்கப்பட்டுவருகிறது.
    அதேபோல் வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டத்துக்கு உள்பட்ட 36 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் இ சேவை மையம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் இ சேவை மையம் தொடங்கி செயல்பட்டு
    வருகிறது.
    இந்நிலையில் மேற்கண்ட 36 ஊராட்சிகளுக்கு உள்பட்ட பொதுமக்கள் வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாள்களுக்கு முன் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருப்பிடம், ஜாதி உள்ளிட்ட அத்தியாசிய சான்றிதழ் கேட்டு ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு இ சேவை மைய பணியாளர்களுக்கும், சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
    இதுபோன்ற சிரமங்களைக் குறைக்கும் வகையில் மேற்கண்ட சான்றிதழ்களை விரைந்து பெற்றிடும் வகையில் மாவட்ட நிர்வாகம் கூடுதலாக இ}சேவை மையத்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai