சுடச்சுட

  

  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 85-வது பிறந்த நாளை முன்னிட்டு, வாலாஜா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே இருந்து போட்டி தொடங்கியது. போட்டியை ராணிப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
  வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி, வாலாஜா பஜார் தெரு, சோளிங்கர் தெரு, அல்லிகுளம், அம்மூர் கூட்டு சாலை, மாந்தாங்கல் மோட்டூர், வி.சி.மோட்டூர் வழியாக வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு முடிவடைந்தது. இப்போட்டியில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
  போட்டியில் வென்றவர்களுக்கு ராணிப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.காந்தி ரொக்கப் பரிசு, கேடயம், சான்றிதழ்களை வழங்கினார்.
  வாலாஜா ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் பாலாஜி, செயலாளர் அப்துல் கரீம், வன்னிவேடு ஊராட்சித் தலைவர் சக்திவேல் குமார், தொழிலதிபர்கள் மகேந்திரவர்மன், அக்பர் ஷெரிப், நிர்மல் ராகவன், செல்வகுமார், ரோட்டரி சங்கத் தலைவர் கே.தியாகராஜன், ரவிசந்திரன், வேதா சீனிவாசன், மகி, வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai