சுடச்சுட

    

    ஆம்பூர் பகுதி உணவு தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
    ஆம்பூரில் இனிப்பு கடைகள், பேக்கரி ஆகிய கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை வேலூர் மாவட்ட நியமன அலுவலர் வி.செந்தில்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உணவுப் பொருள்களுக்கு அதிக அளவு நிறத்தை சேர்க்கக் கூடாது. சுகாதாரமான முறையில் உணவுப் பொருள்களை தயாரிக்க வேண்டும். ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என கடை உரிமையாளர்களிடம் நியமன அலுவலர் தெரிவித்தார்.
    ஆய்வின்போது ஆம்பூர் நகர உணவுப் பாதுகாப்பு அலுவலர் பி.ஆரோக்கிய பிரபு உடனிருந்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai