Enable Javscript for better performance
இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதல்: இருவர் சாவு : பொதுமக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதல்: இருவர் சாவு : பொதுமக்கள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 10th October 2016 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திருப்பத்தூரை அடுத்த கந்திலி அருகே மட்றபள்ளியைச் சேர்ந்தவர் சின்னதம்பி (42). தொழிலாளியான இவர், ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் திருப்பத்தூரில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது லக்கிநாயக்கன்பட்டியில் வசித்து வரும் பெருமாள் மனைவி ஹரியம்மாள் (30) சின்னதம்பியின் இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார்.
    இதையடுத்து திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி பிரதான சாலை, பாரண்டபள்ளி கூட்டுச் சாலை அருகே இரு சக்கர வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது கிருஷ்ணகிரியிலிருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த தனியார் பேருந்து, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சின்னதம்பியும், ஹரியம்மாளும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
    இதையறிந்த அப்பகுதி மக்கள் வேகத் தடை அமைக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கந்திலி போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனியார் பேருந்து நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், வேகத் தடை அமைப்பதாகவும் உறுதி அளித்ததன் பேரில், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    இதனையடுத்து இறந்த சின்னதம்பி மற்றும் ஹரியம்மாளின் சடலங்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து, தலைமறைவான பேருந்து ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai