சுடச்சுட

    

    கொலை மிரட்டல் வழக்கில் போலீஸாரின் மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடையாக இருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
    வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் இம்ரான் (23). இவருக்கும், தில்லைநகரைச் சேர்ந்த சந்தோஷுக்கும் (22) அண்மையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
    இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ் தனது நண்பர்களான கந்திலி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றும் ஆனந்தின் மகன் கவியரசு (21), திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றும் பழனியின் மகன் சரண் (22), முத்தமிழ் நகரைச் சேர்ந்த அபினேஷ் (23), சி.கே.ஆசிரமம் பகுதியைச் சேர்ந்த கவிராஜ் (22), திருப்பத்தூரைச் சேர்ந்த பிரசாத் மற்றும் சாந்தகுமார் ஆகிய 6 பேரை அழைத்துக்கொண்டு மண்டி தெருவில் இம்ரானின் தந்தை பைரோஸின் (47) வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைக்குச் சென்று இம்ரானை தேடியுள்ளனர். அங்கு அவர் இல்லாததால் ஆத்திரமடைந்த அவர்கள், பைரோஸை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
    இதுகுறித்து பைரோஸ் அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து சந்தோஷ், சாந்தகுமார், கவியரசு, பிரசாந்த் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். தலை
    மறைவான அபினேஷ், சரண், கவியரசு ஆகிய மூன்று பேரை தேடி வந்தனர்.
    இந்நிலையில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் போலீஸ்காரர்களின் மகன்களான சரண், கவியரசை திட்டமிட்டே போலீஸார் கைது செய்யாமல் இருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவனுக்கு பைரோஸ் புகார் மனு அளித்தார். அதன்பேரில் காவல் கண்காணிப்பாளர் பகவலன் விசாரணை மேற்கொண்டு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ஆனந்த் மற்றும் தலைமைக் காவலர் பழனி ஆகிய இருவரையும் சனிக்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai