Enable Javscript for better performance
கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    வாணியம்பாடியில் கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
    வாணியம்பாடியை அடுத்த கொண்ணாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (23). கட்டடத் தொழிலாளியான இவருக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் சில மாதங்களுக்கு முன்பு மனைவியைப் பிரிந்து ஈஸ்வரன் வாழ்ந்து வந்தார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
    இந்நிலையில் வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் ஈஸ்வரனின் சடலம் கிடப்பதைப் அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல் ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். பின்னர் கிணற்றில் மிதந்த ஈஸ்வரனின் சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai